• Sat. Oct 11th, 2025

குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு எடை இருக்கவேண்டும்

Byadmin

Jan 2, 2019

(குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு எடை இருக்கவேண்டும்)

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கொழுகொழுவென குண்டாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், குண்டான குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை என்று நினைத்தால் அது தவறானது.

இன்றைய குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் டி.வி, வீடியோ கேம்ஸ், மொபைல் என்று வீட்டிற்குளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். ஆனால், ஃபிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் இருந்தால்தான் ஒபிஸிட்டியைத் தவிர்க்க முடியும். அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாவது விளையாடவிடவேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸில் சேர்க்கலாம். இதனால் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் இயக்கம் கிடைத்து குழந்தை சுறுசுறுப்பாவதுடன் எடையும் அதிகரிக்கது.

குழந்தைகளுக்கு பீட்ஸா, பர்கர், லேஸ், ஃப்ரைடு அயிட்டம்ஸ், க்ரீம் கேக், ஐஸ்க்ரீம் என இதுபோன்ற உணவுகளை பெற்றோர்கள் வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவு வகைகளில் வைட்டமின்கள், புரோடீன்கள், நார்ச்சத்து போன்ற எந்த ஊட்டச்சத்தும் உடலுக்குக் கிடைக்காது. வெறும் கொழுப்புச் சத்தும், மாவுச் சத்தும் மட்டுமே கொண்ட இந்த உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் பருமன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

சரியான நேரத்துக்கு குழந்தைகளை சாப்பிடச்செய்யும் பழக்கமும் முக்கியமானது. காலையில் பள்ளி கிளம்பும் அவசரத்தில் குழந்தைகள் சாப்பிடாமல் செல்வது மிகத் தவறு. காலை வேளையில் உடலுக்கு அதிக எனர்ஜி தேவைப்படும். எனவே, காலை 8 மணிக்குள்  அவர்களை சாப்பிடவைத்துவிட வேண்டும். இல்லை என்றால் செல்கள் பலவீனமாகி எனர்ஜி குறைந்துவிடும்(Energy metabolism).

பெப்சி, கோலா, பாட்டில் ஜூஸ், பாக்கெட்  ஜூஸ் என கண்டதையும் சாப்பிடப் பழக்காமல், பிள்ளைகளிடம்  பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை வளர்ப்பது நல்லது. உணவு வேளை தவிர்த்து, காலை, மாலை மற்றும் உறங்கச் செல்லும் முன் பழங்கள் சாப்பிடக் கொடுக்கலாம்.

பெற்றோர் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம்… குழந்தைக்கு பசி எடுப்பதற்கு முன், சாப்பாட்டை வைத்துத் திணிக்கக் கூடாது. அதேபோல பசி எடுக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனி கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *