• Sun. Oct 12th, 2025

மாரடைப்பினால் மரணமான மாணவனுக்கு 3 A

Byadmin

Jan 3, 2019

(மாரடைப்பினால் மரணமான மாணவனுக்கு 3 A)

கடந்த வாரம் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்ற, கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
களுத்துறை, இசுரு உயண பிரதேசத்தைச் சேர்ந்த இம்மாணவன் உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகுவதற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் வெளியான பெறுபேறுகளுக்கு அமைய உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
அவரது நினைவாகப் பெற்றோர் நேற்றைய தினம் இரத்த தான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதேவேளை மாணவனின் இழப்பானது, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *