(2019ம் ஆண்டின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(04)..)
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவரகள் கூட்டத்தில் 2019ம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் தினம் உள்ளிட்ட எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எதிர்வரும் 08ம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.