(முஸ்லிம்களை ஒதுக்கும் ஐதேக – 2 ஆளுநர்களை நியமித்து முஸ்லிம்களை கௌரவித்த மைத்திரி)
முஸ்லிம்களின் வாக்குப்பலத்தால் ஆட்சிக்கு வந்த ஐ தே க முஸ்லிம்களை புறக்கணித்து தமிழ் கூட்டமைப்பின் மகுடிக்கு ஆடி முஸ்லிம்களை ஒதுக்கும் நிலையில், முஸ்லிம்கள் பெரும்பாலும் வாக்களிக்காத சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இரண்டு முஸ்லிம் ஆளுணர்களை ஒரே நேரத்தில் நியமித்தமைக்காக உலமா கட்சி ஜனாதிபதிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இது பற்றி முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும்பாலும் ஐ தே கட்சிக்கும் அதனுடன் இணைந்துள்ள கட்சிகளுக்கும் வாக்களிப்பவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். ஆனாலும் ஐ தே கவினால் முஸ்லிம் சமூகம் ஓரம் கட்டப்பட்டதே அதிகம்.
கடந்த பொது தேர்தலில் 98 வீத முஸ்லிம்கள் ஐ தே க கூட்டு கட்சிக்கு வாக்களித்தும் மேல் மாகாணத்துக்கு தமிழர் ஒருவரை நியமித்து விட்டு கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவரை ஆளுனராக நியமிக்காத துரோகத்தை செய்தது. இதனை பெறுவதற்கு கையாலாகாத கட்சிகளாக ஐ தேகவுடன் அடிமையாகியுள்ள முஸ்லிம் கட்சிகளும் இருந்தன.
இந்த நிலையில் கடந்த அரசியல் குழப்பத்தின் போதும் முஸ்லிம் சமூகம் பெரும்பாலும் ரணிலுடன் நின்ற போதும் இரண்டு முஸ்லிம் ஆளுனர்களை ஜனாதிபதி நியமித்ததன்மூலம் முஸ்லிம்களை மிகப்பெரிய அளவில் கவுரவித்துள்ளார். இதற்காக முஸ்லிம் சமூகம் ஜனாதிபதிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.
இந்த வகையில்
மைத்திரி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் 2005 முதல் இணைந்து செயற்படுவதற்காக முஸ்லிம் உலமா கட்சி பெரிதும் மகிழ்ச்சியடைகிறது.