(பணிப்புறக்கணிப்பிற்கு தேசிய தொழிற்சங்க முன்னணியினர் தயாராகின்றனர்..)
சம்பள முரண்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் வெறும் அறிக்கைக்கு மாத்திரம் கட்டுப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தேசிய தொழிற்சங்க முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும், குறித்த அறிக்கையை வெளியிட்டமைக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் எனவும் தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்பிரிய இதன் போது சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.