(சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சைகள் நாளை(15) நடைபெறாது..)
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சைகள் நாளை(15) நடைபெற மாட்டாது என யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பி.பரந்தாமன் அறிவித்துள்ளார்.
குறித்த பரீட்சையை திங்கள், வெள்ளி தவிர்ந்த ஏனைய கடமை தினங்களில் சாரதி அனுமதிப் பத்திர கிளையுடன் தொடர்பு கொண்டு பரீட்சை எழுத முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.