சென்னை தியாகராயநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31–ஆம் திகதி தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்கள் எரிந்த இந்த விபத்தால் கடை முற்றிலும் நிலை குலைந்து காணப்பட்டது.
கட்டிடம் முழுவதும் தீ பரவியதால், கட்டிடத்தின் உறுதித்தன்மை மிகவும் மோசமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் தானாக விழுந்தால் பலத்த சேதம் ஏற்படலாம் என்பதால் கட்டிடத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதைத் தொடர்ந்து கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்டிட இடிபாடுகளிலிருந்து இரண்டு பாதுகாப்பு பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெட்டகங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், வெள்ளி மற்றும் தங்க நகைகள் இருக்கலாம் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.