(அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்தில் 100 பந்து கிரிக்கெட் லீக்: விதிமுறைகள் வெளியீடு)
கிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐந்து நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்பின் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அறிமுகம் ஆனது. அதன்பின் டி20 கிரிக்கெட் அறிமுகம் படுத்தப்பட்டது. மூன்று மணி நேரத்திற்குள் போட்டி முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களிடம் இதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு ஏற்பட்டது.
இதனால் ஏறக்குறைய கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாட்டு வாரியங்களும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்நிலையில் 100 பந்து கிரிக்கெட் லீக் (The Hundred) தொடரை நடத்த இங்கிலாந்து முயற்சி செய்து வந்தது.
இதற்கான இறுதி வடிவம் கொடுத்து, தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த வருடம் இந்தத் தொடர் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
1. ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து பந்துகள் அல்லது 10 பந்துகள் வீசலாம். ஆனால், மொத்தம் 20 பந்துகள் மட்டுமே வீச முடியும்.
2. இரண்டரை நிமிடம் என தலா ஒருமுறை இரண்டு அணிகளுக்கும் இடைவேளை (strategic timeout) கொடுக்கப்படும்.
3. முதல் 25 பந்துகள் பவர் பிளேயாகும்.
4. ஐந்து வாரங்கள் நடத்தப்படும் இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.