அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு ஒன்றுக்கு ஒரு பெரும்பான்மை நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு,புத்த பெருமானை அவமதிக்கும் விதத்தில் சில வசனங்களை பதிவேற்றிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட கண்டி தந்துறை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கு பிணை வழங்கப்படாமல் ஒரு மாதத்துக்கும் அதிகமாக விளக்கமறியலில் இருப்பதாக அந்த வாலிபரின் பெற்றோர் மிகுந்த வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு ஒன்றுக்கு ஒரு பெரும்பான்மை நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு,புத்த பெருமானை அவமதிக்கும் விதத்தில் சில வசனங்களை பதிவேற்றிய காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பேஸ் புக் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில் வாலிபர் பதிவிட்ட கருத்தை மட்டும் அவரது புகைப்படத்துடன் எடிட் செய்து சில பெரும்பான்மை விஷமிகள் உலவ விட்டுள்ளதாகவும் அதனால் இந்த பிராச்சினை பூதாகரமாக உருவெடுத்ததாக வாலிபர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பேஸ்புக் கொமண்ட் பதிவு செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறித்த வாலிபர் குறித்த படத்தை தான் பதிவேற்றவில்லை என தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் வாலிபர் மறுத்து வருவதால் விசாரணை அறிக்கை வரும் வரை அவருக்கு பிணை வழங்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வாலிபர் தொடர்பில் பொலிஸார் பதிவு செய்துள்ள பீ அறிக்கையில் படி அவருக்கு பிணை வழங்க மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லாத அவ்வளவு கடுமையான சட்டத்துக்கு கீழே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பகிரங்கமாக இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் அல்லாஹ்வை அவமதிக்கும் விதத்திலும் உரையாற்றிய ஞானசார தேரருக்கு முதலில் மிக கடுமையாக பீ அறிக்கை சமர்பித்த பொலிஸார் பின்னர் பீ அறிக்கையை மாற்றி அவருக்கு அவசர பிணை வழங்க முடியுமானால் அதைவிட குறைவான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஒரு மாதகாலத்துக்கு மேலாக விளக்கமறியலில் இருந்தும் சலுகை கிடைக்காமல் போனது ஏன் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் கண்டி மாவட்டத்தில் உள்ள பிரபல முஸ்லிம் அமைச்சர்கள் கூட பாரமுகமாக உள்ளதாக குறித்த வாலிபரின் தரப்பு விசனம் வெளியிட்டுள்ள அதேவேளை இந்த விடயத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் அவர்களின் முயற்சியால் அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல தலையிட்டு வாலிபருக்கு வரும் வாரத்துக்குள் பிணை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வாலிபர் தரப்பு தெரிவித்தது.
இந்த நாட்டில் வன்முறையை விரும்பாத முஸ்லிம்களில் ஒரு சிலர் இவ்வாறு ஆத்திரத்தில் பிறர் மனம் புன்படும் வகையில் நடந்துகொள்வது குறித்து விமர்சிப்பவர்கள் இந்த முஸ்லிம் இளைஞரையும் அவரது உணர்வுகளையும் தூண்டி விடும் வகையில் நடந்துகொண்டவர்கள் தொடர்பில் குறை கூறாமல் இருப்பது கவலையளிப்பதாக சமூக ஆர்வளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். mn