• Sat. Apr 4th, 2026

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, காதர் மஸ்தானுக்கு முழுமையான பொறுப்புக்கள் கூடிய நியமனம்.

Byadmin

Mar 11, 2019

(ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, காதர் மஸ்தானுக்கு முழுமையான பொறுப்புக்கள் கூடிய நியமனம்.)

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னால்  பிரதி
அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி,சிறுநீரக நோய்த்தடுப்பு,தேசிய போதைப்பொருள் ஒழிப்பு,சிறுவர் பாதுகாப்பு,தேசிய உணவு உற்பத்தி,சுற்றாடல் பாதுகாப்பு,நிலைபேறான அபிவிருத்தி,ஸ்மார்ட் ஸ்ரீலங்கா போன்ற தேசிய செயற்றிட்டங்களை வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப் படுத்துவதற்கான பூரண அதிகாரங்கள் வழங்கப்பட்டு  ஜனாதிபதியால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வன்னி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு நிலையினைக் கருத்தில் கொண்டு மேற்படி செயற்திட்டங்களை கட்சி பேதம் கடந்து நீதமான முறையில் முன்னெடுப்பதற்காகவே முன்னால் பிரதி அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டார்.

மேற்படி செயற்றிட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தினால்   தேசிய ரீதியாக துரிதமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வன்னி மாவட்டத்தில் அந்த கருத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *