(சூரியக்கதிர்களால் இத்தனை பாதிப்புகளா..? இதனால் யாருக்கு அதிகமாக பாதிப்பு..?)
கோடைக் காலம் வந்துவிட்டால் குளிர்பானங்களை நாடிச் செல்லுதல், பருத்தி ஆடைகளை அணிதல், நீச்சல் என வாழ்க்கை முறையை மாற்றி விடுகிறோம். சூரியக்கதிர்கள் அதிகளவில் உடலில் படுவதால் சில நோய்கள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது. அத்துடன் சரும நிறத்திலும் மாற்றம் ஏற்படத் தான் செய்கிறது.
இதிலிருந்து பாதுகாப்பதற்கு வெளியே செல்லும் போது சன்கிறீம், சன் கிளாஸ் அணிந்து சென்றாலும் uv கதிர்களின் பாதிப்பால் உடலில் எரிவு, வீக்கம் ஏற்படுவதுடன் சில நேரங்களில் கண்களை திறக்க முடியாமல் வீங்கி மூடிக் கொள்ள நேரிடும்.
சூரியக் கதிர்கள் விஷமாகுமா??
விஷம் என்றால் உயிரைப் பறிக்கும் பொருள், அல்லது சில பூச்சி, பாம்பு கடிப்பதால் ஏற்படும் விஷமல்ல. அதிகளவு சூரியக் கதிர்களின் பாதிப்பினால் உடலில் எரிச்சல், காயங்கள் என்பன ஏற்படுகிறது. அதனை சூரியக் கதிர் விக்ஷமாதல் எனக் கூறுகின்றனர். இதற்கு உடனடியான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
சூரியக் கதிர்கள் விஷமாவதை அறிந்து கொள்வது எப்படி??
சருமம் விஷமாதல் என்பது சூரியக் கதிர்களால் ஏற்படும் எரிச்சலே. சரும எரிச்சல் சூரியக் கதிர்கள் பட்டு 6 முதல் 12 மணி நேரத்தில் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.
சரும எரிச்சலின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இடத்தில் வலி, வீக்கம், சிவந்து போதல் போன்றன ஏற்படும்.
சருமம் நஞ்சாதலின் போது பாதிக்கப்பட்ட இடத்தில் வெடிப்பு மற்றும் அதிகமாக சிவந்து போதல், தாங்க முடியாத தலை வலி , வாந்தி, தலைசுற்றல் என பல அறிகுறிகள் அவதானிக்க முடியும்
இதனால் யாருக்கு அதிகமாக பாதிப்பு
• கருத்தடை மாத்திரைகள், அன்ரிபயோட்டிக் மற்றும் மூலிகை மருந்துகளை உட்கொள்ளுபவர்கள்.
• வெள்ளை நிறத் தோலை உடையவர்.
• சருமப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பரம்பரையை சேர்ந்தவர்கள்.
நோயைக் கண்டறிதலும் அதற்கான சிகிச்சை முறைகளும்
சூரியகதிர்களால் பாதிப்படைந்ததை கண்டறிந்தால் தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளுவது அவசியமாகும். சரும சிறப்பு நிபுணர்களால் பரிந்துரைக்கபடும் கிறீம், லோசன், அன்ரிபயோட்டிக் என்பவற்றை பயன்படுத்துவதுடன் அதிகளவான நீரை அருந்துவது சருமத்தின் ஈரப்பதனிற்கு அவசியமாகும்.
சருமத்தில் வீக்கமும் வெடிப்பும் அதிகமானால் ஸீரீரோயிட் கிறீம் பயன்படுத்தல் சிறந்தது. உடல் வறட்சி அதிகமானால் சேலைன் (IV fluid) கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஸீரீரோயிட் மருந்துகளை உட்கொள்ளுதல் மூலம் உடல் வலியையும் வீக்கத்தையும் குறைக்க முடியும். நோய் தீவிரமடைந்தால் சிகிச்சையை உடனடியாக பெற்றுக் கொள்ளுவதுடன் தொடர்ச்சியான மேற்பார்வையில் நோயாளியை வைத்து இருத்தல் அவசியமாகும்.
சூரிய கதிர்களின் நச்சுத் தன்மையிலிருந்து பாதிப்படைவதை தடுப்பது எப்படி???
1. சூரிய வெளிச்சம் அதிகமாக படாமல் தவிர்த்தல்.
2. சிறந்த சன் கிறீம், சன் கிளாஸ் அணிதல் மற்றும் நீச்சல் அல்லது வெளியே செல்லுதல்.
3. கோடைக் காலத்தில் அதிகளவான நீரை அருந்துதல்.