(போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்!)
அன்பு நெஞ்சங்களே…. அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று ஒவ்வொரு கிராமத்திலும், பிரதேசத்திலும், ஏன் நாட்டுக்கே பெரும் தலையிடியாக இருப்பது போதைப் பொருள் பாவனை இன்று சர்வசாதாரணமாக அதை பாவிக்கிறார்கள்.
இதை நிறுத்துவதற்கு பயானுக்கு மேல் பயானோ அல்லது Motivation Program என்ன செய்தாலும் அதன் பலன் வெறும் பூச்சியமாக தான் இருக்கிறது.
நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை காட்ட வேண்டும். அப்படி இல்லையா ஊரில் உள்ளவர்கள் ஒரு முடிவை எடுங்கள் போதைப் பொருள் பாவிப்பவனுக்கு உங்களுடைய பெண் பிள்ளையை மணம் முடித்து கொடுக்க வேண்டாம்.
பெற்றோர்களே… ஏன் கூறுகிறேன் என்றால் நிச்சயமாக அவனுக்கு ஆண்மை சக்தி இருக்கவே இருக்காது. உங்களுடைய மகள் அப்படிபட்டவனை முடித்து விட்டால் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் விதவையாக வீட்டுக்கு வருவாள். நான் கூறுவது பொய் என்றால் இன்று உங்களுடைய ஊர்களில் இளம் வயதில் விதவையான பெண்களிடம் விசாரித்து பாருங்கள் ஒன்று அவன் போதைக்கு அடிமையாகி பாரிய நோயினால் இறந்திருப்பான்.
இல்லையென்றால் சரியான முறையில் குடும்ப நடாத்த ஆண்மையில்லாததால் விவாகரத்து செய்திருப்பாள்…
ஆக போதை பொருள் பாவிக்கக்கூடியவர்ளின் பெற்றோர்ளே! உங்கள் பிள்ளை திருமணம் முடித்து கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து அந்த பெண் பிள்ளைகளின் வாழ்க்கை சீரழித்து விட வேண்டாம்.
மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்கள் கட்டாயம் நன்றாக விசாரித்து உங்கள் பிள்ளைகளை கொடுங்கள்.
பள்ளிவாயல் நிருவாகம் திருமண நற்சான்றிதழ் கொடுக்கும் போது இது விடயமாக அவர்களுக்கு கட்டாயம் தெரிவியுங்கள்.
அத்தோடு இப்படி போதைக்கு அடிமையானவர்களை அவர்கள் மாத்திரம் பாவித்து கேவலமாக மரணித்தாலும் பரவாயில்லை (போதை பாவனை விட்டு விடவில்லை பாவ மன்னிப்பு தேட வில்லை என்றால் நிச்சயமாக படுகேவலமாகதான் அவனுடைய மரணம் நிகழும்) ஏன் மற்றைய வாலிபர்களையும் அதற்கு அடிமையாக்குகிறார்.
நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள் நீங்கள் இன்னொருவருக்கு போதை பாவனையை பழக்கினால் பழக்கப்பட்ட நபரின் தாய் தந்தையின் கண்ணீர் உன்னுடைய கப்ருக்கும் உனது தாய் தந்தையின் கப்ருக்கும் இடியாக வந்து விழும்.
பெற்றோர்களே மாலையாகினால் வீட்டில் வளர்க்க்கூடிய , ஆடு, மாடு, கோழி போன்றவை காணாமல் போனால் தேடுகிறோம் ஆனால் தன்னுடைய மகன் இரவு 12.00 மணியாகியும் வீடு வரவில்லை என்றாலும் நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதுமில்லை. அவனை தேடுவதுமில்லை. யாராவது உங்கள் பிள்ளை பற்றி கூறினால் இல்லை அவன் செய்து இருக்க மாட்டான் அவனை ஒழுங்காக தான் வளர்த்து உள்ளோம் என்று மற்றும் கூறி விடாதீர்கள். கட்டாயம் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுங்கள்.
இறுதியாக நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் நிச்சயமாக உங்கள் பொறுப்பை பற்றி நாளை மறுமையில் விசாரிக்கபடுவீர்
ஆக பள்ளிவாயல் நிருவாகம், பாடசாலை நிருவாகம், ஊர் மக்கள், சங்கங்கள், இது விடயமாக கூடிய கவனம் செலுத்துமாறு பணிவாய் வேண்டிக்கொள்கிறேன் வேண்டும்.
Article By:
அனஸ்