• Sun. Oct 12th, 2025

இஸ்லாமிய சகோதரருக்கு நடந்த அக்கிரமம் – பன்றிக்கறியை வாயில் ஊட்டிய, இந்துத்துவ பயங்கரவாதிகள்

Byadmin

Apr 9, 2019

(இஸ்லாமிய சகோதரருக்கு நடந்த அக்கிரமம் – பன்றிக்கறியை வாயில் ஊட்டிய, இந்துத்துவ பயங்கரவாதிகள்)

அசாம் மாநிலம், பிஸ்வானாத் பகுதியில் சௌக்கத் அலி என்ற 68 வயது முதியவர் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை சுற்றிவளைத்த இந்துத்துவ பயங்கரவாத கும்பல் அவரிடம் மாட்டுக்கறி விற்பனை செய்வதற்கான உரிமம் உள்ளதா என மிரட்டும் தொனியில் கேட்டுள்ளது.

அவரும் உரிமம் இருப்பதாக கூறிய நிலையில், வங்கதேசத்திலிருந்து வந்தவனா நீ? உன்னிடம் தேசிய குடியுரிமை சான்று உள்ளதா? என கேட்ட அந்த கும்பல் தங்களிடம் இருந்த பன்றிக்கறியை சௌக்கத் அலியின் வாயில் வைத்து அழுத்தி சாப்பிட கட்டாயப்படுத்தியது. இஸ்லாம் மார்க்கத்தில் பன்றிக்கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளாதால் சௌக்கத் அலியும் அதனை உண்ண மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் முதியவர் என்றும் பார்க்காமல் அவரை அனைவர் முன்பாகவும் இரத்தம் சொட்ட சொட்ட அடித்து குற்றுயிராய் விட்டுச்சென்றனர்.

இதுகுறித்து சௌக்கத் அலியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தெரிவுத்துள்ள போலீசார், சௌக்கத் அலி கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் பீஃப் ஸ்டால் நடத்தி வருவதாகவும், அவர் இந்தியர் தான் என்றும் கூறினர்.

அசாம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் மீது பசு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்கள் கணக்கில் அடங்காதது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறி வரும் நிலையில் அசாமில் இஸ்லாமியர்களை வங்கதேச அகதிகளாக சித்தரித்து 40 லட்சம் முஸ்லிம்களை விரட்டுவதற்கு NRC சட்டதிருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தது. அது நடந்து முடிந்த ஆட்சியில் வெற்றிகரமாக நிறைவேறாததால் அது குறித்து மீண்டும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளது பாஜக. இதனை காரணமாக வைத்து வட கிழக்கு மாநிலங்களில் முஸ்லிம்களை வங்கதேச அகதிகள் எனக்கூறி இந்துத்துவ பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.றியை வாயில் தினித்திருக்கிறார்கள்.
ராணுவம் இவர்கள் வசம், காவல்துறை இவர்கள் வசம். இதை தான் ஒவைசி,
ராணுவமும், காவல்துறையும் 3 மணிநேரம் ஒதுங்கி நிற்கட்டும். நாங்கள் இவர்களை பார்த்து கொள்கிறோம் என்று சொன்னார்.
ஒரு இஸ்லாமிய முதியவரை தொடவே இவர்களுக்கு 100 பேர் தேவைப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *