(தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் தமிழிசை மற்றும் எச்.ராஜா கடுமையாக பின்னடைவு!)
இந்திய தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், .முதல் சுற்று முடிவில்
தமிழகத்தில் 35 தொகுதிகளில் ஸ்டாலின் தலைமையிலான திமுக முன்னிலை பெற்று உள்ளது.
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே கனிமொழி முன்னிலை பெற்று வருகிறார்.
தமிழிசையை விட 27ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை பெற்று வருகிறார்.
அதேபோல் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எச்.ராஜா முதல் சுற்றில் 890 வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளார்.சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். ( நக்கீரன் )