(பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி)
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (14) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் நிருவாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் ஏ ஹபீப் காசிமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நிதியுதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் முஸ்லிமுடைய வாழ்வில் ஈமானும் அமலும் எனும் தலைப்பில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்களும் பல்லின சமூகத்திற்கு மத்தியில் வாழும் ஒரு முஸ்லிமின் கடமைகள் எனும் தலைப்பில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அறபு மொழித்துறை ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர் அஷ்ஷெய்க் எச்.எல்.முகைதீன் பலாஹி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
–எச்.எம்.எம்.பர்ஸான்-