(நான் அமெரிக்க பிரஜை கிடையாது! கோத்தபாய ராஜபக்ச)
தாம் அமெரிக்க பிரஜை கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தாம் இலங்கை பிரஜையெனவும் அவர் நேற்றைய தினம் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், அமெரிக்க குடியுரிமையை நீக்கி கொள்ளும் நடவடிக்கைகளில் 99 வீதம் பூர்த்தியாகியுள்ளது.
ஓர் கடிதமொன்று மட்டுமே எனக்கு கிடைக்கப் பெற உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது கடவுச்சீட்டை வழங்கியுள்ளதாகவும் சுய விருப்பின் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமையை நீக்கி கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.