• Sun. Oct 12th, 2025

அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா..?

Byadmin

May 10, 2019

(அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா..?)

உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் உள்ளன. ஒரு மாதம் வரை 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

நாம் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் செரிமானம் ஆக ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது. இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

இதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது. எலும்பு பலவீனம் அடைய கால்சியம் சத்து அவசியம். அத்திப்பழத்தில் கால்சியம் சத்து அதிக அளவு உள்ளது. எனவே, இரவு 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் நமக்கு அதிக அளவு கால்சியம் சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

மார்பக புற்று நோய் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளை அழிக்கும்.

உடல் எடையைக் குறைக்க இரவில் 2 அல்லது 3 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அத்திப்பழத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் போதும்.

அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தொண்டைப்புண் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

இருமல் மற்றம் ஆஸ்துமா போன்றவை குணமாக அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும். முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நம் கண்களுக்குத் தேவையான விட்டமின் ஏ அதிக அளவு நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *