(வத்தளை, மபோலையில் 4 வீடுகள் தீயில் எரிந்து நாசம், (13 ஆடுகள் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்.)
வத்தளை, மாபோலயில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 4 வீடுகள்
முழுமையாக தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன. வத்தளை, மாபோல தூவத்த பிரதேசத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் வீடுகளில் வளர்க்கப்பட்ட 13 ஆடுகள் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயிணை கட்டுப்படுத்த ஊர்மக்கள், கடற்படையினர் மற்றும் தீயணைப்பு குழுவினர் இணைந்து செயற்பட்டுள்ளனர். இதன் காரணமாக தீயை கட்டுப்படுத்த முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவை முஸ்லிம் சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகள் எனவும் பலகையினால் செய்யப்பட் வீடுகள் என்பதனால் வேகமாக தீ பரவியுள்ளது.
தீயணைப்பிற்காக கொழும்பு நகர சபையிற்கு உரித்தான இரு தீயணைப்பு வாகனங்களும், கடற்படையினருக்கு உரித்தான இரு தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கசிவே தீ பரவலுக்கு காரணமாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில் , தீ பரவல் குறித்து வத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.