• Sat. Oct 11th, 2025

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட சுண்டைக்காய்…!

Byadmin

May 27, 2019

(ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட சுண்டைக்காய்!)

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது, இலைகள் ரத்த சசிவினை தடுக்கக் கூடியவை.சுண்டைக்காயின் கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு  வகிக்கிறது.
 சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை  அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
 பச்சை சுண்டைக்காயை சமைத்து உண்ணலாம். இதனால் நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி இவற்றை போக்கும். சுண்டைக்காயை  இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க  வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை  நீங்கும்.
 சுண்டைக்காய் மார்புச் சளியை போக்கும். குடலில் உள்ள கசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயினால் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்று வலி முதலியவை நீங்கும்.
 சுண்டைக்காய் இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீக்கும். மேலும் தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *