• Sat. Apr 4th, 2026

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க

Byadmin

Aug 19, 2019

(மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க)

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

என்மீது நம்பிக்கை வைத்து என்னைத் தெரிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்தி அமைப்பிற்கு தங்களது நம்பிக்கையை காப்பாற்றுவேன் என உறுதிமொழி வழங்குகின்றேன் என ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தற்பொழுது காலி முகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மாநாட்டில் இவர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றுகையில் இதனைக் கூறினார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *