ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது மாநாட்டில் வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சட்டம் தொடர்பான எண்ணக்கருவே ஒரு நாகரிக சமூகத்தின் அடித்தளமாகும் என்று சொன்னால் அது தவறாகாது.
சட்டத்தின் நீதியான ஆட்சிதான் ஜனநாயகத்தின் பொற்காலம் ஆகும். மக்களின் நலனுக்காகவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும் இது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. ஒரு நாட்டுக்குள் இருவேறு சட்டங்கள் இருக்கக் கூடாது. சட்டம் சகலருக்கும் சமனாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் பிரஜைகள் எப்போதும் சட்டத்தை மதிப்பவர்களாக மாற வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
“ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது” – கோட்டாபய
