• Sun. Oct 12th, 2025

முழு வீச்சுடன் பிரச்சாரத்திற்காக, களத்தில் குதித்துள்ள பொதுஜன பெரமுன

Byadmin

Sep 20, 2019

(முழு வீச்சுடன் பிரச்சாரத்திற்காக, களத்தில் குதித்துள்ள பொதுஜன பெரமுன)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய மாவட்ட இணைப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடக்கவில்லை என அடையாளம் காணப்பட்டுள்ள சில மாவட்டங்களுக்கு இணைப்பாளர்களாக வேறு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி நியமித்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்ட இணைப்பாளராக பிரசன்ன ரணதுங்க, யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக சனத் நிஷாந்த, மன்னார் மாவட்ட அமைப்பாளராக நிமல் லங்சா, கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக மகிந்தானந்த அளுத்கம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமிழ் பேசக் கூடியவர்கள் என்பதால், தமிழ் மாவட்டங்களுக்கு இவர்களை இணைப்பாளர்களாக பொதுஜன பெரமுன நியமித்துள்ளது.
அனைத்து மாவடங்களின் அரசியல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் பிரேம ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவரில் ஒருவர் கலந்துக்கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை அனைத்துத் தேர்தல் தொகுதிகளில் ஒழுங்கு செய்யவும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *