(அமைச்சர் ராஜித கூறியது பொய் ; JVP )
கோத்தாபய ராஜபக்ஷக்கு எதிராக JVP நீதிமன்றம் செல்கிறது என அமைச்சர் ராஜித கூறியதில் எவ்வித உண்மையும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி மறுப்பு வெளியிட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷக்கு எதிராக JVP நீதிமன்றம் செல்ல உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார். அவரது இரட்டை பிரஜா உரிமை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக கூறிய அவர் அது தொடர்பில் ஜே வி பி நீதிமன்றம் செல்ல உள்ளதாக டொக்டர் ராஜித சேனாரத்ன இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது குறிப்பிட்டிருந்தார்.