(“கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் சட்டபூர்வமானவை” – அலி சப்ரி”)
“ ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் சட்டபூர்வமானவை. நீதிமன்றம் அதனை ஏலவே உறுதி செய்துள்ளது. யாரும் அதில் சந்தேகமிருந்தால் சட்ட நடவடிக்கைளை எடுக்கலாம். என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும், கருத்துத் தெரிவிக்கையில்,
தோல்வியை தெரிந்துகொண்ட எதிர்தரப்பினர் செய்யும் பிரசாரங்களில் இதுவும் ஒன்று. தேர்தலுக்கு முன்னர் கோட்டா வெளிநாடு செல்லப்போவதாக கூறி போலி விமான டிக்கெட் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் கோட்டாவின் கடவுச்சீட்டு நீதிமன்றில் இருக்கிறது. அவர் வெளிநாடு செல்ல நீதிமன்றின் அனுமதி பெற வேண்டும். இது கூட தெரியாமல் ஐக்கிய தேசிய முன்னணி தோல்வியில் உளறுகிறது..” ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணி அலி சப்ரி கொழும்பில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். இதேவேளை ஒருவரின் குடியுரிமை நீக்கம் குறித்தோ விசா விடயங்கள் குறித்தோ கருத்து வெளியிட முடியாதென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. – என தெரிவித்தார்.