• Fri. Oct 24th, 2025

“மு.கா.வின் மரணசாசனம் சாய்ந்தமருது மக்களால் எழுதப்பட்டுவிட்டது” மயோன் முஸ்தபா

Byadmin

Nov 11, 2019

(“மு.கா.வின் மரணசாசனம் சாய்ந்தமருது மக்களால் எழுதப்பட்டுவிட்டது” மயோன் முஸ்தபா)

வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபடுத்த முன்னரே அக்கட்சிக்கான  மரணசாசனம் சாய்ந்தமருது மக்களால் எழுதப்பட்டுவிட்டது என முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை ஆதரித்து  சனிக்கிழமை(9) மாலை 6 மணி முதல் 9 மணிவரை  முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.மயோன் முஸ்தபாவினால்  ஒழுங்குபடுத்தப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பும்  மக்கள் கலந்துரையாடலும் அவரது   கல்முனை  தேர்தல் காரியாலய முன்றலில்   நடைபெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில் 
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளர்  தகுதி அற்றவர். அவருக்காக இன்று வாக்கு கேட்பவர்களும் தகுதியற்றவர்கள். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வாக்கு கேட்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோமாளி போன்று கூத்தாடியாக செயற்படுகின்றார்.இதில் வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்களை ஈடுபடுத்த அவர் நடவடிக்கை எடுப்பதாக அறிகின்றோம். முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு குறித்தோ உரிமைகள் சம்மந்தமாகவோ பிரச்சாரங்களை மேற்கொள்ளாமல் கேளிக்கை பேச்சுகளை கூறுகின்றார்.
 முஸ்லிம்கள் உண்மையானவர்கள். நீதியானவர்கள் என்ற நிலைப்பாடு சகோதர இனத்தவர்களிடம் ஒரு காலம் மரியாதையுடன் காணப்பட்டது ஆனால் இன்று சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது இனவாதங்களை கக்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளதுஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கான முழுக் காரணம் முஸ்லிம் மக்கள் மீது கொண்ட வெறுப்பு அல்ல மாறாக முஸ்லிம் தலைமைகள் மீதுள்ள வெறுப்பினால் தான் இன்று முஸ்லிம் மக்கள்கள் மீது கலவரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.  தனித்துவ அரசியல் செய்ததன் வினை தான் இவைகள்  இந்த பெருச்சாளிகளை துரத்த வேண்டாமா?  என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் அவரது கருத்தில் எங்கிருந்தோ வருகின்றவர்கள் எம்மை ஏமாற்றலாமா? குறிப்பாக சாய்ந்தமருது மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காகாங்கிரஸ் கட்சிக்கு மரணசாசனம் எழுதிவிட்டார்கள். ஆகவே தான் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் எழுச்சிக்காய் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்க வேண்டும். 18 ம் திகதி நாடு பூராகவும் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியில் பட்டாசு முழங்கும் என்று கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *