தமக்கு எதிரான தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், “எவ்வாறான சேறுபூசும் பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டில் இன்று உள்ள மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதால் அவர்களை ஏமாற்ற முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றுள்ள மக்கள் மிகவும் புத்திசாலிகள்; அவர்களை ஏமாற்ற முடியாது” – கோட்டாபய