( கண்டி மாவட்ட முஸ்லிம் வேட்பாளரை களமிறக்க பிரதமர்,உயர் மட்டக்குழு தீர்மானம் )
2020 பாராளுமன்ற பொது தேர்தலில் கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முஸ்லிம் வேட்பாளராக
தொழிலதிபர் ஏ.எல்.எம்.பாரிஸை களமிறக்க பிரதமர் உள்ளிட்ட உயர் மட்டக்குழுவும் தீர்மானித்துள்ளது.
தமது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறும் சிறந்த முறையில் தமது பணிகள் முன்னெடுக்க வேண்டும் என
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிடட குழு கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை சிறந்த பணியாக தொடர் அவரை ஆசிர்வதித்ததாகவும் தொழிலதிபர் பாரிஸ் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முஸ்லிம் வேட்பாளர் என்ற வகையில் ஏ.எல்.எம்.பாரிஸை நியமிக்க ஏலவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதமரின் விசேட அழைப்பையடுத்து (23) மாலை அலரி மாளிகைக்கு சென்றிருந்த பாரிஸ் தலைமையிலான குழுவினர்
மற்றும் பிரதமர் உள்ளிட்ட குழுவினருக்குமிடையில் இடம்பெற்ற கண்டி மாவட்ட அரசியல் நிலவரம் குறித்த கலந்துரையாடலின் போது மேற்கண்ட கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச,தொழிலதிபர் ஏ.எல்.எம் பாரிஸ் , சமூக சேவையாளர் சலாஹுதீன் முஸ்லீம் மற்றும் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் இவ் விசேட சந்திப்பில் கலந்து கொண்டனர்.
2020 ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், கண்டி மாவட்டத்தில் தாமரை மொட்டு சின்னம் சார்பாக களமிறங்கப்படும் நபர் யார் என்பதில் ஆதரவாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் இருந்துவந்த நிலையில் அதை நிவர்த்திக்கும் பொருட்டே இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
(ஊடகப்பிரிவு-பாரிஸ் ஹாஜியார் )