(குடும்ப தகராறு காரணமாக ஹம்பாந்தோட்டையில் கைகலப்பு)
நேற்றிரவு (18) ஹம்பாந்தோட்டை பதகிரிய, முஸ்லிம் கிராமத்தில் ஏற்பட்ட இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.இங்கு ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு வரை போய் அதே குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், ஆத்திரமுற்ற உறவினர்களின் மூலம் ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று, இறந்தவரின் இறுதி கிரியை இடம்பெருகின்றமையால் பதகிரியவில் சிறு பதட்ட நிலை ஏற்பட்டு பின் ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் அலி சப்ரி அவர்களின் முயற்சியினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு,
ஹம்பாந்தோட்டை , ஜம்இய்யத்துல் உலமா சபை
0717255136 – தலைவர்
0756188888 – செயலாளர்