• Sat. Oct 11th, 2025

சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு 6-ந் தேதி விசாரணை

Byadmin

Jul 3, 2017

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 3 பேர் சார்பிலும் மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணைக்கு பிறகு தான் மனு ஏற்கப்படுமா? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்பது தெரியவரும்.

சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் கூறி இருப்பதாவது:-

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் என்னை தண்டிப்பதற்கு நான் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல, அந்த சட்டமானது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக்கு பொருந்தாது. எனவே இந்த வழக்கில் எனக்கு விதிக்கப்பட்டுள்ள 4 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *