• Sun. Oct 12th, 2025

ஜக்காத் வழங்கும் முறை; இது உண்மை சம்பவம் !

Byadmin

May 20, 2021

சவூதியில் .. என்னுடைய முதலாளிக்கு ஒரு ஆட்டு பண்ணை உண்டு .. 300 ஆடுகள் இருக்கும் .
வருடம் ஒரு முறை ..அல்லது இருமுறை அந்த ஆடுகளில் 20 பெண் ஆட்டை பிடித்து வண்டியில் ஏற்ற சொல்வார் .
அதை அப்படியே ஒரு ஏழையின் வீட்டில் இறக்கிவிடுவார் .. நானும் கூடவே செல்வேன் . “ஏன் ஒரே வீட்டிற்கு 20 ஆட்டையும் கொடுக்கின்றீர்கள்? அதை 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாமே.? 20 குடும்பம் உன்னை வாழ்த்துமே !” என்று சொன்னேன்.
அல்லது அவர்கள் உங்களின் இரத்த உறவுகளா? மொத்தத்தையும் ஒரே வீட்டில் கொடுக்கின்றீர்களே என கேட்டேன் .
என் முதலாளி சொன்னார் ..நீ சொல்வது போல 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாம் .. அப்படி பிரித்துக் கொடுக்கும்போது ஒரு ஆட்டை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் ?.. நாளை யாரிடமாவது விற்றுவிட்டு அடுத்த 2 நாளில் செலவு செய்து விடுவார்கள் . பிறகு நம்மையும் மறந்து விடுவார்கள் .. நம்முடைய நன்மையின் அளவும் அதோடு முடிந்து விடும் .
அவர்களின் வறுமையும் ஒருபோதும் ஒழியாது .
ஆனால் நாம் ஒரு ஏழையின் வீட்டில் கொடுத்து சென்றோம் என்றால்… அந்த வீட்டில் அடுத்த சில வருடத்தில் வந்து பார் .. ஆடுகள் பண்ணையாயிருக்கும் .. அவர்கள் அந்த ஆடுகளை பார்க்கும்போதெல்லாம் நமக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள் . அந்த ஆடுகளை கொண்டு அவர் வறுமையும் நீங்கிவிடும்! அவரும் யாருக்காவது ஜக்காத் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து உயர்ந்துவிடுவார் .

அந்த ஆடுகளின் சந்ததிகள் அடுத்து அடுத்து ஜக்காத் பொருளாக கை மாறிக்கொண்டே போகும். காலமெல்லாம் நமக்கு நன்மை வந்துக் கொண்டே இருக்கும் .. என சொன்னார் .
இன்றைக்கு நம் மக்களின் நிலைமையை எண்ணி பார்க்கிறேன் .. இருக்கிற 100 வீடுகளில் 20 வீடுகள் ஏழைகள் வீடாக இருக்கும் .
அந்த 20 வீட்டிக்கும் என் முதலாளி செய்தது போல அன்றே யாராவது உதவி செய்திருந்தால் .. இன்று ஏழைகள் இல்லாத ஊராக நமது ஊர் மாறியிருக்கும் .
நாம் ஒவ்வொருவரும் ஜக்காத் கொடுக்கிறோம்!
ஆனால் அதை நாம் எப்படி கொடுக்கிறோம் என்பதில் தான் … சறுக்கி விடுகிறோம் .
ஜக்காத் கொடுப்பவர்கள் .. சிந்தியுங்கள் .ஏழைகள் இல்லாத முஸ்லீம் மக்களை உருவாக்குவோம் .
✍️
இன்று‌ நம் நாடுகளில் முஸ்லிம்கள் செய்யும் தவறு 1 லட்சம் ரூபாய் ஜகாத்தை 100 பேருக்கு 1000 ரூபாய் என்று பிரித்து பிரித்து கொடுப்பதால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை அந்த நேரம் சில அன்றாட செலவுகளுக்கு அது பயன்படும் மீண்டும் அடுத்த வருடம் அவர்கள் ஜகாத் எதிர்பார்க்கும் நிலையில் தான் வந்து நிர்ப்பார்கள்.

ஜகாத் என்பதின் அசல் பொருள்..!
ஒருவருக்கு ஒரு வருடம் ஜகாத் கொடுக்கப்பட்டால் அவர் அடுத்த வருடம் ‌ஜகாத் வாங்க கூடாது‌ . அவர் பொருளாதாரத்தில் முன்னேறி விட வேண்டும். இந்த முறைகள்தான் ஏழைகளையும் அவர்களின் வருமையையும் நிறந்தரமாக போக்கும் என்பதை உணர்ந்து முறையாக ஜக்காத்தை நமது ஏழை உறவுகளுக்கு வழங்கி அதன் நன்மைகளை தொடர்ச்சியாக அறுவடை செய்வோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *