சில்லறை மற்றும் நடமாடும் வியாபாரிகள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கான பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
அனைத்து பகுதிகளிலும் பேக்கரி உற்பத்திகளை நடமாடும் விற்பனையாளர்களூடாக விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று (27) இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.