நேற்றைய தினம் (30) 36 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1441 ஆக அதிகரித்துள்ளது. ஹட்டன், கதுருவெல, காலி (இருவர்), ஹொரணை, மத்துகம, கலகெதர, களுத்துறை (மூவர்), அநுராதபுரம், ஹெட்டிபொல, பத்தேகம, உடலந்த, வேயங்கொடை, கொழும்பு 06, யாழ்ப்பாணம், மத்துகம, கண்டி, களுத்துறை தெற்கு, கோனமுல்ல, இராஜகிரிய, மக்கொன, கிராந்துருகோட்டை, பதுளை, கட்டுவ, கண்டி, பத்தரமுல்லை, கலென்பிந்துனுவெவ, மரதன்கடவல, பலாங்கொடை, இரத்தினபுரி (இருவர்), கஹவத்தை, வட்டபொல மற்றும் குருவிட்டை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர். இதனிடையே, நேற்றைய தினம் 2849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுகுள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 452 ஆக அதிகரித்துள்ளது.