• Sat. Apr 4th, 2026

இன்றைய வானிலை அறிக்கை விபரம்..

Byadmin

Jun 1, 2021

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.
மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும்,வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்**************************
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு,காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.
தேசமானியமொஹமட் சாலிஹீன்சிரேஸ்ட வானிலை அதிகாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *