• Sun. Oct 12th, 2025

நீதி அமைச்சர் அலி சப்ரியினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

Byadmin

Jun 10, 2021

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டி பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணியும், நீதி அமைச்சருமான அலி சப்ரி குறித்த பொதியை மக்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.

கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களின் படி மெகொட கொலன்னாவ மற்றும் கோதட்டுவ, போபத்த ஆகிய இடங்களுக்கு பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகள் ஆண்டுக்கு பல முறை வெள்ளத்தை எதிர்கொண்டு வருவதால், கொலன்னாவ பிரதேச செயலாளருக்கு உரிய நிறுவனங்களால் அதிகபட்ச உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் தாழ்வான பகுதிகளில் தடை செய்யப்பட்ட கால்வாய்கள் மற்றும் வடிகான் அமைப்புகளை அகற்றத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், பெற்றோலிய வளங்கள் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், நீதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் பயாட் பாக்கீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசோக லங்காதிலக மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *