• Wed. Apr 8th, 2026

12.5 கி.கி. சமையல் எரிவாயு நாடு முழுவதும் இருப்பதை உறுதிப்படுத்தவும்!

Byadmin

Jun 10, 2021

வீட்டுப் பாவனைக்கான 12.5kg சமையல்எரிவாயு சிலிண்டர் நாடு முழுவதும் இருப்பதை உற்பத்தியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், விற்பனையாளர்கள் 12.5kg சிலிண்டரை விற்பனை செய்வதை நிராகரிப்பது அல்லது நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதனை கொள்வனவு செய்வதை தடுக்கும் செயலில் ஈடுபடுவதையும் தடை செய்து, குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில், வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நிறையில் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை மற்றும் அதன் விலையில் குளறுபடிகள் காணப்படுவதாக, பாவனையாளர்கள் விசனம் தெரிவித்திருந்த நிலையில் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *