அடுத்த சில வாரங்களில் வீட்டிலிருந்து ஆன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கக்கூடிய இலவச ( Data கட்டணம் அற்ற) மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று டிஜிட்டல் தொழில்நுட்ப மாநில அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த புதிய மென்பொருள் Zoom மென்பொருளைப் போன்றது என்றும், இலங்கையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் இணைந்து தொடங்கப்படும் என்றும் திரு நமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.