முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொலைக் குற்றத்துக்கு தண்டனை அனுபவித்து வந்த அவர், அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த வாரம் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்திருந்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ் உள்ள வீடமைப்பு அமைச்சின் கீழ் வரும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.