• Thu. Apr 9th, 2026

சமூகத்தில் அதிகளவு டெல்டா தொற்றாளர்கள் – இது மிகவும் எச்சரிக்கை மிக்கதும், அபாயம் மிக்கதுமான நிலைமை

Byadmin

Jul 20, 2021

சமூகத்தில் 300 ‘டெல்டா’ வைரஸ் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்று இலங்கை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் எச்சரிக்கை மிக்கதும், அபாயம் மிக்கதுமான நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த தொற்றாளர்கள் நாட்டில் ஒரு பிரதேசத்தில் மாத்திரமின்றி பல இடங்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *