நிதியுதவிக்கான கோரிக்கை எதுவும் இலங்கையிடம் இருந்து இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் மசாஹிரோ நொசாகி இதனைத் தெரிவித்துள்ளார் என்று, இன்னர் சிட்டி ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பருவினப் பொருளாதார அபிவிருத்தி, பொதுக் கண்ணோட்டம் மற்றும் பருவினப் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக இலங்கையுடன் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.