• Sat. Apr 4th, 2026

தனுஷ்க, குசல் மற்றும் திக்வெல்லவின் தடை நீக்கம்!

Byadmin

Jan 7, 2022

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது.

குறித்த 3 வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபாராதமும், 1 வருட காலம் சர்வதேச போட்டிகளில் விளையாட தடையும், 6 மாத காலம் உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள சிம்பாம்வே அணிக்கு எதிரான தொடரில் இம் 3 வீரர்களும் விளையாடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம் 3 வீரர்களும் இங்கிலாந்து சுற்றுத் தொடரின் போது உயிர்க் குமிழி முறையை மீறி கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இரவு இவர்கள் மூவரும் டரம் பிரதேசத்தில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வீடியோ ஆதாரமும் வௌியிடப்பட்டிருந்தது.

குற்றம் சுமத்தப்பட்ட குறித்த வீரர்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடாத்துவதற்காக 5 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *