• Sat. Oct 11th, 2025

இலங்கை அணி அபார வெற்றி!

Byadmin

Jan 17, 2022

சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியசாத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 296 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சீன் கொலின் வில்லியம்ஸ் 9 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதேபோல் ரெஜிஸ் சகப்வா 81 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்களுடன் 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன10 ஓவர்களில் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நுவான் பிரதீப் மற்றும் ஜெப்ரி வாண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதற்கமைய, 297 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் பெதும் நிசங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் தலா 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

சரித் அசலங்க 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் Richard Ngarava அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *