இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருப்பாகக் காணப்பட்ட 382.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம், டிசம்பர் மாதத்தில் 175.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் முடிவில் வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமத 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் என்று ஏற்கனவே மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 29 ஆம் திகதி கையிருப்பின் பெறுமதி 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருப்பதாக ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருந்த பதிவின் ஊடாக உறுதிப்படுத்தியிருந்தார்.