• Wed. Oct 15th, 2025

பன்றியின் இதயத்தை பொருத்திய மனிதர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று உயிரிழப்பு.

Byadmin

Mar 9, 2022

பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயத்தை, பொருத்திஇருந்த மனிதர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து நகரைச் சேர்ந்த டேவிட் பென்னட்க்கு(57) இதயம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதயம் தொடர்ந்து செயலிழந்து வந்தது, வேறு இதயம் மாற்றாவிட்டால் பென்னட் மரணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பென்னடுக்கு மாற்று இதயம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. சீக்கிரமாக வேறு இதயம் பொருத்தவேண்டும். மருத்துவர்கள் ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக‌ விஞ்ஞானத்தைக் கையில் எடுத்தனர். விலங்கின் இதயத்தைப் பொருத்த ஒருவழியாக முடிவு செய்யப்பட்டது. பலகட்ட முடிவுகளுக்குப் பிறகு, மரபணி மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

பன்றியின் இதயத்தை மனிதருக்கு மாற்றுவதற்கான அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் மேரிலாந்து மருத்துவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் மரபணு மாற்றம் செய்யப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயம் பென்னடுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
டேவிட் பென்னடை காப்பாற்ற வேண்டும் என்றே பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. இது சோதனை முயற்சி என்று டேவிட் பென்னட் குடும்பத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் இதயம் எப்படி வேலை செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை அவர்கள் குடும்பத்தினர் அறிந்திருந்தனர். பன்றியின் இதயம் மரபணு மாற்றபட்டு மனிதருக்கு பொருத்தப்பட்டிருப்பது மருத்துவ உலகில் இதுவே முதல்முறை.

”இது ஒரு குருட்டுத்தனமான முடிவு. ஒன்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்து நான் இறக்க வேண்டும்,அல்லது சிகிச்சை வெற்றி பெற்று நான் நலமுடன் வாழ வேண்டும். இதுவே என் கடைசி முடிவாக இருக்கும்” என அறுவை சிகிச்சைக்கு முன் டேவிட் தெரிவித்திருந்தார். பென்னட் மற்றும் அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.
மேரிலாந்து மருத்துவ ஆராய்ச்சி குழு பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயத்தை மனிதனுக்கு வைத்து அறுவை சிகிச்சை செய்தது. தற்போது பன்றியின் இதயத்தை பெற்றுக்கொண்டவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இரண்டு மாதம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார் பென்னட். துரதிருஷ்டவசமாக இன்று பென்னட் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் விளைவுகள் குறித்து பென்னடுக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தி, அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு தான் இந்த அறுவை சிகிச்சை நடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *