நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும், பொது மக்களுக்கும் உறுதியளித்துள்ளார்.
இதேவளை திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் இறக்குமதியை எளிதாக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை முதல் நாட்டின் பல பகுதிகளில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதுடன், இந்த காலப்பகுதியில் மிக நீண்டநேர மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படுகிறது.
மின் உற்பத்தியாளர்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபை பெற்றுக் கொள்ளாததால், மின்வெட்டுக்கு கவலையுடன் ஒப்புதல் அளிக்க நேரிட்டதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.