சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பைசல் பின் பர்ஹான் அல் சவுத் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான சவுதி தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹார்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள இராச்சிய தூதரகத்தின் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பைசல் பின் பர்ஹான் அல் சவுத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்க உள்ளார்.
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இரு தரப்பு கலந்துரையாடல்களுக்காக உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தவையாகும்.
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இன்றைய தினம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, நேபாளம் செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.