இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமதுஅமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், அவர் தமது இராஜினமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கடந்த காலங்களில் தொடர்ந்து தெரிவித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது