நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த சட்டத்தை மீறும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் எரிபொருள் விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தடை..
