முகக்கவசம் தொடர்பான தனது புதிய முடிவை சுகாதார அமைச்சுவெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமில்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்து இருந்தார்.
ஆனால், பொது போக்குவரத்து மற்றும் உட்புற செயல்பாடுகளின் போது முகமூடிகளை அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் அமைச்சரின் முந்தைய அறிவிப்பை மாற்றியமைத்து புதிய அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.