• Sat. Oct 11th, 2025

அன்றாட உணவில் கீரைகளின் பங்கு

Byadmin

May 3, 2022

அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பிரண்டை, முசுமுசுக்கை, முடக்கத்தான், நச்சுக்கொட்டை, காசினி, முக்கரட்டை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியிருக்கும் சிறப்பான உணவு கீரை. தினம் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்க முடியும்.

அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பிரண்டை, முசுமுசுக்கை, முடக்கத்தான், நச்சுக்கொட்டை, காசினி, முக்கரட்டை போன்ற கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

முருங்கைக்கீரை

வைட்டமின்கள், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்புச்சத்து, தாதுப்பொருட்கள் போன்ற பல வகையான சத்துக்கள், முருங்கைக்கீரையில் நிறைந்து காணப்படுகின்றன. இவை கண் பார்வையையும், எலும்புகளையும் பலப்படுத்தும்.

பருப்புக்கீரை

பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கீரைகளில் பருப்புக்கீரையும் ஒன்றாகும். இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள உதவும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றும்.

வல்லாரைக்கீரை

இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபக சக்தி மேம்படும். இதில் தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து வைட்டமின்கள் அடங்கியுள்ளது. மற்ற கீரைகளை போலவே இதையும் சமைத்து சாப்பிடலாம்.

நச்சுக்கொட்டை கீரை

இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்திருக்கும் இந்த கீரை மூட்டு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. குளிர் காலத்தில் ஏற்படும் சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளையும் குணமாக்கும்.

மணத்தக்காளி கீரை

கருவுற்றிருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இதன் இலைகளை ஒரு நாளில் 4 முதல் 5 முறை நன்றாக மென்று சாற்றை விழுங்கி வந்தால் வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

ஒவ்வொரு கீரையிலும் ஏராளமான பலன்கள் உள்ளன. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *