• Sat. Oct 11th, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் 

Byadmin

May 9, 2022

அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கூட்டத்தைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலில் அமைதியான முறையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்பில் உள்ள ‘மைனா கோ கம’ மற்றும் கோட்டா கோ கம’ ஆகிய இரண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்ட தளங்களையும் அழித்திருந்தனர்.

இந்த சம்பவம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற பல பஸ்கள் நகரை விட்டு வெளியேற முற்பட்ட போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளன.

குறித்த பஸ்கள் கொழும்பு திம்பிரிகஸ்யாயவுக்கு அருகில் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *